சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்/ தயாரிப்பாளருமான சாம் பால் தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர உள்ளார். பல நிறுவனங்களின் தலைமை சட்ட ஆலோசகராக திகழ்ந்து வரும் சாம், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கம் ‘பட்ற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

 “ 
ஜெயந்தன் என்னிடம் தனது படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். என்னுடைய ஆஜானுபாகுவான உடலும்உயரமும் இந்த கதாப்பாத்திற்கு கச்சிதமாய் பொருந்தும் என்று ஜெயந்தன் கூறினார். பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் நான் நடித்த காட்சிகளை பார்த்த நண்பர்களும், தேர்ந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளதாக கூறினர்.” என்று கூறினார் சாம் பால்.
 தனது முதல் பட அனுபவத்தை பற்றி கூறும்பொழுது “ எனக்கு மிகவும் மகிழ்ச்சிமிக்க அனுபவமாய் அமைந்தது. வில்லத்தனமான நடிப்பு மிகவும் புதுமையாய் இருந்தது. சண்டைக்காட்சிகளில் நடிப்பது நான் நினைத்தது போல் இல்லாமல் மிகவும் கடினமாக இருந்தது.“ என்றார்.
 “ பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூலம் வாய்புகள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும்தற்போது கவனம் முழுவதும் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளிவர உள்ள ‘பட்றபடத்தில்தான் உள்ளது. இறைவனின் கிருபையில் இதுவரை நான் தொட்ட அனைத்து காரியங்களும் வெற்றியாக அமைந்துள்ளது, நடிப்பும் அவ்வாறே இருக்கும் “ என நம்பிக்கை பொங்க கூறினார் சாம் பால்.


Post a Comment

 
Top